• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் குடல் அழற்சி நோய்களான கிளினிக் துவக்கம்..,

BySeenu

Jun 1, 2026

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான க்ரோன்ஸ் நோய்மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கி உள்ளது.

இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி திறந்து வைத்தார். க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் உள்ளிட்ட IBD நோய்கள் இந்தியாவில் இளம் வயதினரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .

தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் காணப்படுதல், வயிற்றுவலி, காரணமற்ற உடல் எடை இழப்பு, ரத்தசோகை மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் மேம்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பயாலஜிக் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் சிக்கலான IBD நோயாளிகளுக்கான குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன.