• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் மூடப்பட்டது

ByA.Tamilselvan

Oct 28, 2022

குளிர்காலம் துவங்க உள்ளதால் இமயமலையில் உள்ள கேதார்நாத் கோயில் மூடப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம். அதன்படி, கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு முன்பு, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், மாவட்ட அதிகாரிகளும், கோவில் கமிட்டி நிர்வாகிகளும் இருந்தனர். இந்திய ராணுவத்தின் மராத்தி ரெஜிமெண்ட் படைப்பிரிவினர், பக்தி பாடல்களை இசைத்தனர். யமுனோத்ரி கோவிலும் நேற்று மூடப்பட்டது. கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினம் மூடப்பட்டது.