நேற்று காலை 11-00 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் டவுண்டானம் அருகே இந்துமக்கள்கட்சி சார்பில் திருரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தி இந்துமக்கள்கட்சி மதுரை மாட்டத்தலைவர் சோலைகண்ணன் தலைமையில் தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இதே நாளில் 2005ல் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தியாகி A.R.காளிதாஸ் அவர்களின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கும்,தீபம் ஏற்றுவதற்காக தன்னுயிரை தீயை வைத்து மாய்த்து கொண்ட தீபப்போராளி பூர்ணசந்திரனின் திருஉருவ படத்திற்கும் மலர் அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துமக்கள்கட்சி தலைவர் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் அவர்களும்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் புலிகொடிவேந்தன் K.C.திருமாறன்ஜி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் சிவசேனாவின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ்,இந்துமக்கள்கட்சி மாநில துணைத்தலைவர் பாம்பன்பாலன்ஜி,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொருப்பாளர் மருது ஆனந்த்,இந்துமக்கள்கட்சி தென்மாவட்டத்தலைவர் கிருஷ்ணன், அனுமன் சேனா மாநில செயலாளர் ராமலிங்கம்,, இந்துமக்கள்கட்சி மாநில தொண்டரணி செயலாளர் அண்ணாத்துரை,இந்துமக்கள்கட்சி மதுரை மாநகர செயலாளர் கோவில் செல்வம்,இந்துமக்கள்கட்சி மதுரை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீராம்ஜி மற்றும் இந்துமக்கள்கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக்,அனுமன் சேனா நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பு:ஆர்ப்பாட்டத்தின் பத்து கோரிக்கைகளும் இத்துடன் இணைக்கப்ட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இந்து மக்கள் கட்சி – தமிழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பின்வரும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகள்:
01. திருப்பரங்குன்றம் தீபத்தரனில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றிட வலியுறுத்தி! தமிழக வெற்றி கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு கடந்த கால திராவிட மாடல் தீய சக்தி திமுகவின் அணுகுமுறையை தொடரக்கூடாது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையே தொடரும்! அதாவது தீய சக்தி திராவிட மாடல் திமுக ஆட்சியின் அணுகுமுறை தொடரும் என அறிவித்துள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் நிர்மல் குமாருக்கு கண்டனம்! நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.تதிருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிட வேண்டும்.* முருக பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். 02. மாண்புமிகு தமிழக சட்டமன்ற சபாநாயகர் திரு ஜே சி டி பிரபாகரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக அமைச்சர் திரு வன்னியரசு ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் மோசடி மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், மத பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள வன்னி அரசுக்கு கண்டனம். மேலும் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொலை செய்த கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என முயற்சிகளை மேற்கொள்ளும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசுக்கு கண்டனம். 03. பள்ளி மாணவ மாணவிகள் இந்து சமய சின்னங்களான திருநீறு, குங்குமம் திருமண், ருத்ராட்சம், கையில் மந்திரித்து கயிறு கட்டுதல், ஆகியவை அணிந்து வருவது தடுக்கப்படும். என்று கூறியுள்ள பள்ளி கல்வி அமைச்சருக்கு கண்டனம்! இஸ்லாமிய கிறிஸ்தவ மாணவ மாணவிகள் அவர்களின் சமய சின்னங்களான குல்லா, பர்தா, புர்கா, சிலுவை ஆகியவை அணிந்து வருவதற்கு அனுமதிக்கும் பொழுது இந்து சமய சின்னங்களை மட்டும் தடை செய்வது கண்டனத்திற்குரியது. 04. ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் நாளன்று கடைபிடிக்கப்பட்ட பொழுது திருவள்ளுவரின் உண்மை தோற்றமான திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக கவிஞர் வைரமுத்து திருநீறு மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் இதற்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வைரமுத்து சிவனடியார்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். 05. பசு மாடுகளை பொது இடத்தில் வெட்டி பலியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்ற இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சூர்யா அவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளுக்கு கண்டனம்! மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள கோவை மாநகர காவல் துறைக்கு கண்டனம். 06. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யும் விஷயத்தில் ஆன்மீகவாதிகளுக்கும் பக்தர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் சார்ந்தவர்களை திருக்கோவில் நிர்வாகத்தில் அறங்காவலர்களாக நியமனம் செய்யக்கூடாது.
07. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே 3.5% முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. தற்பொழுது அதை 5% ஆக உயர்த்துவதற்கு ஜோசப் விஜய் அரசாங்கம் முயற்சி செய்கிறது அதற்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மத அடிப்படையில் மக்களை பிரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். 08. தமிழகத்தில் நவோதயா பள்ளிக்கூடங்கள் மற்றும் பி எம் ஸ்ரீ கல்விக்கூடங்கள் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும். முஸ்லிம் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்குவது போல் இந்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும். 09. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது மூன்று வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. தினசரி தொடரும் கொலை கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்குலைவு கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கவழக்கங்கள் அதிகரித்து குற்றங்கள் பெருகி வருகின்றன. சிங்கத்தின் போலீஸ் படை அமைத்த பிறகும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படைப்பிரிவு அமைத்த பிறகும் குற்றங்கள் தொடர்கின்றன. கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும். 10. மகளிருக்கு மாதம் 2500 உதவித்தொகை வருடத்திற்கு ஆறு சமையல் கேஸ் சிலிண்டர்; விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்