• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ..,

ByP.Thangapandi

Jun 22, 2026

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்-ன் 52 வது பிறந்த நாளை கொண்டாடப்படுகிறது., தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பிறந்த நாள் என்பதால் தவெக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்திபட்டி, சேடபட்டி, எழுமலை, அனைக்கரைப்பட்டி, நத்தப்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,

தொடர்ந்து எழுமலை பேரூர் கழக தவெக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குழந்தைகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினார்.,

இதே போல் அனைக்கரைப்பட்டியில் 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு நோட், பேனா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.,