• Tue. May 30th, 2023

ஐபிஎல் கோப்பை தோனிக்கு தான்! – நாணி

ஐபிஎல் மெகா ஏலம் முடிந்த பிறகு பல்வேறு அணிகளும் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி மற்றும் பெரிய வித்தியாசம் இன்றி கிட்ட தட்ட அதே அணியுடன் களமிறங்குகிறது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளரான நாணி, சிஎஸ்கே அணி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் சாதகம் அதிகம் உள்ளது. சென்னை அணி ஏற்கனவே அணியில் இருந்த வீரர்களை மீண்டும் எடுத்துள்ளார். தோனி போன்ற ஒரு சிறந்த கேப்டன் தலைவனாக இருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியும் , தங்களுடைய தூண்கள் போன்ற வீரர்களை அமைத்தாலும் ஹர்திக் பாண்டியா, பௌல்ட், டிகாக், சாஹர் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் இழந்துவிட்டனர். இவர்கள் இல்லாமல் இனி மும்பை விளையாட வேண்டும் கொல்கத்தா ஒரு புதிய கேப்டனை தேர்ந்து எடுக்க வேண்டும்.

சென்னை அணியின் பிளேயிங் லெவனை நாணி தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தொடக்க வீரராக கான்வே, ருத்துராஜ் ஆகியோர் உள்ளனர். நடுவரிசையில் மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, தோனியை நாணி தேர்ந்து எடுத்துள்ளார். மேலும் ஆல் ரவிண்டராக சிவம் துபே, திபக் சாஹர், பிராவோ ஆகியோர் உள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து வீரர் ஆடம் மிலின், ஆசிஃப் ஆகியோர் அணியில் உள்ளனர். இதே போன்று தீர்மானிக்கப்பட்ட அணி தற்போது ஐபிஎல் தொடரில் இல்லை. இந்த ஒரு காரணத்திற்காகவே சிஎஸ்கே அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று நாணி கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *