



திங்கள் சந்தை அருகே மணவிளை அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம் ஆண்டின் படி திருக்கோயில் நிதி ரூ. 14.90 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா இன்று காலை 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் ராஜசேகர், மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் ஜோசப்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெரோம் பெனடிக்ட், பேரூர் செயலாளர் செல்வதாஸ், ஒப்பந்தகாரர் ஆண்டி செட்டியார், மாவட்ட வன்கொடுமை பிரிவு கண்காணிப்பாளர் குழு உறுப்பினர் சக்திவேல், திமுக நிர்வாகிகள் ஜெபராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புஷ்ப கிரோஸ், ஷீலா, மாவட்ட மகிளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

பன்னெடும் காலமாக பராமரிப்பு குறைவாக இருந்த பல கோவில்களில் இப்போது பராமரிப்பு மற்றும் பழுதுகள் சீர் செய்யப்படுவது, அப்பகுதியில் உள்ள பக்தர்களால் மட்டும் அல்ல பொது மக்களின் மத்தியிலும் நல்ல வரவேற்புடன் பாராட்டும் பெற்று வருகிறது.

