



வேளிமலை குமாரக்கோயில் முருகன் கோயிலில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

இன்று காலை உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையர் பழனிக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், கோயில் மேலாளர் மோகன்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். கல்லூரி மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


