• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வரலாற்றில் அழியா கதையான கிளியோபாட்ராவின் சரித்திரம்…

Byகாயத்ரி

Feb 1, 2022

பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர்.

பெண்கள் என்றாலே அழகுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் பண்டைகால முதல் செவ்விதழ், மலர்கொடி, வெண்ணிலா என வெள்ளை சிவப்பாக இருப்பதுதான் அழகு என்று கூறி பாடி சென்று விட்டனர். எகிப்திய அழகி கிளியோபாட்ராவை யாரும் அறியாதவர்களே இருக்க முடியாதது. ஆனால் ஆங்கிலப்படத்தில் திரையிடுவது போல் கிளியோபாட்ரா வெள்ளை நிறம் கொண்டவள் அல்ல. ஆமாம் எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி சேக்ஸ்பியரின் நாயகன் சூலியர் சீசர் ஒரு பிரமாண்டமான அறையைக் கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும், கண்டு மயங்காத ஆண்களே கிடையாது என்று பல வரலாற்று சம்பவங்கள் கூறுகின்றன.

கிளியோபாட்ரா முதலில் எகிப்திய நாட்டை சேர்ந்தவள் அல்ல. ஒரு கிரேக்க வம்சத்தின் பிள்ளை. பேரும் புகழும் குவியும் இடத்தில் தான் உண்மைகளும் கருப்பு பக்கங்களும் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய சில அறிய தகவல்கள் உங்கள் முன். உண்மையான கிளியோபாட்ரா, சரித்திரங்களில் புகழப்படும் கிளியோபாட்ரா, கிளியோபாட்ரா 7 ஆவாள். வரலாற்றில் இவளுக்கு முன்பு 6 கிளியோபாட்ராகள் இருக்கின்றனர். சீசரும், மார்க் அந்தோனியும் கிளியோபாட்ராவுடன் உறவில் இருந்ததற்கு நிறைய காரணங்கள் இருந்திருகின்றன. ஆனால் முதன்மை காரணமாக கருதப்பட்டது அரசியல் பின்புலம்தான். அதுவும் ரோமபுரி மற்றும் எகிப்து நாடுகளுக்கு மத்தியிலான அரசியல் உறவுதான் காரணம் என்று கூறபடுகிறது.

கிளியோபாட்ரா ஒரு எழுத்தாளரும் கூட. காஸ்மெடிக் என்னும் மருந்து ஆய்வகப் புத்தகத்தை கிளியோபாட்ரா எழுதியாதாக கூறப்படுகிறது. கிளியோபாட்ராவுக்கு முன்பு அந்த நாட்டை ஆண்டுவந்த அவளது இரு சகோதரர்களை அடுத்தடுத்து கொன்றுவிட்டு எகிப்த்து சாம்ராஜ்யத்தின் அரசியாக கிளியோபாட்ரா வலம் வந்தால். கிளியோபாட்ரா தன் உடன் பிறந்த சகோதரனேயே திருமணம் செய்து கொண்டதாக சில வரலாற்று கூறுகள் கூறுகிறது. ஆனால் நிறைய கிளியோபாட்ரா பற்றிய வரலாறுகளின் குவியலில் அது எந்த கிளியோபாட்ரா என்று குழப்பம்தான் நிலவுகிறது.

ரோமாபுரி நாட்டிற்கும் கிளியோபாட்ராவிற்கும் பல சம்மந்தங்கள் உண்டு.ரோமானிய நாட்டின் உச்சமாக இருந்த சீசர் கிளியோபாட்ரா மீது கொண்ட காதலால் அவளுடன் சேர்ந்து வாழ துவங்கினார்.இதனால் எகிப்திலியே அவர் இருந்துவிட்டதால், ரோமானிய நாட்டை கண்டுக்கொள்ளாததுக்கும் பல அரசியல் காரணங்களுக்காகவும் சீசர் கொலைசெய்யப்பட்டார்.அவர் கொலை செய்யப்பட்டபோது கிளியோபாட்ரா ரோமாபுரியில் தான் இருந்துள்ளார்.எகிப்திய அழகி, எகிப்திய நாட்டை ஆண்டவள் என்று கூறப்படும் கிளியோபாட்ரா உண்மையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவள் என்று சில வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவளுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அதில் ஒரு இரட்டையர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நால்வரில் ஒருவரை தவிர மற்ற மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும் கூறபடுகிறது. வெற்றிகரமாக தனது ராஜாங்கத்தை நகர்த்தினார். கிளியோபாட்ரா சீசருடனும், சீசர் இறந்த உடன் அவரின் படைத் தளபதியான மார்க் அந்தோணியுடனும் உறவுவில் இருந்தாலும் தனது ராஜியத்தில் பெரிதாக்குவதில் சிறிதும் கோட்டை விடவில்லை. ஒரு பெண்ணாக இருந்தாலும். அரசியலில் மிக நேர்த்தியாக வென்றவள் கிளியோபாட்ரா.பல அறிக்கூர்ந்த விஷயங்களை நொடியில் சாதிப்பார்.

ஆனால் அந்த பேரழகிக்கும் விதி தன் விளையாட்டை காண்பித்துவிட்டது. கிளியோபாட்ரா தன்னை தானே அழித்துக்கொண்டாதாக வரலாற்றில் உள்ளது.அதுவும் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்பட்டதாக கூற்றுகள் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ஊசி மூலமாக விஷத்தை உடலில் செலுத்தி பாம்பு கடித்ததாக மாற்றி இருக்கலாம் அல்லது மக்களை அவ்வாறு நம்ப வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எது எப்படியானாலும், அறிவு மிகுந்த எகிப்த்தின் சாம்ராஜியத்தை ஆண்ட கிளியோபாட்ரா வரலாற்றில் எப்போதும் பேசுப்பொருளாகவே இருந்து வருகிறார்.எத்தனை பேரழகிகள் வந்தாலும் இந்த எகிப்திய பேரழகி தான் நினைவில் நின்றுள்ளார்.