துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என ஹிட் கொடுத்தவர்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செல்வராகவன், “திடீரென ஒரு நாள் தனுஷ் ஒரு கதையுடன் வந்தார், அவர் கூறிய கதை என்னை கவர்ந்தது, சவால் மிகுந்த கதையாவும் இருந்தது. இதனால், இந்த படத்தையே இயக்கலாம் என்று முடிவு எடுத்தோம், நானே வருவேன் கதை தனுஷின் கதை என்றும், திரைக்கதையை நான் இயக்கியுள்ளேன்” என கூறியுள்ளார்.