ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடபடும் இந்த தருணத்தில், ஒவ்வொரு ஆண்டும் முன்னாளில் இந்த சுதந்திரம் கிடைக்க போராடிய களங்களின் வரலாறுகளை சற்று அசைபோடுவது வழக்கம் அப்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுதந்திர போராட்டத்திற்க்கு மிகவும் தொடர்புடைய வீடு ஒன்று உள்ளது.ஐரிஸ் வம்சாவழியில் பிறந்தவர் அன்னிபெசண்ட் அம்மையார்.
பிறப்பால் வெள்ளைகார பெண்மணியாக இருந்தாலும் இந்திய பெண்மணியாக தனது உணர்வின் பால் வெளிகாட்டியவர்.லண்டன் நகரில் பிறந்த இவர் தனது 46 ஆம் வயதில் இந்தியாவுக்கு வந்தார்.தன்னை ஒரு இந்தியராகவே கருதிய அன்னிபெசண்ட் அம்மையார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது கைது செய்யபட்ட அன்னிபெசன்ட் அம்மையார் ஊட்டி புதுமந்து பகுதியில் உள்ள இந்த வீட்டில்தான் சிறைவைக்கபட்டார்.காலபோக்கில் லண்டனில் நடந்த ஏலத்தில் 40அயிரம் ரூபாய்க்கு பிர்லா நிர்வாகம் எடுத்து அன்னிபெசன்ட் .அம்மையாரின் நினைவகமாக பராமரித்து வருகிறது.
மேலும் நம் நாட்டின் தேசியக்கொடி இந்த வீட்டிலிருந்துதான் உருவாக்க திட்டமிடபட்டதாக கூறப்படுகிறது.நீலகிரி மாவட்டத்திற்க்கு சுற்றுலா பயணிகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடத்தை கண்டு பிரமிக்கின்றனர்.மேலும் பல்வேறு தலைவர்களால் பல்வேறு வடிவங்களில் பல்வேறு எண்ணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியானது பல பரிணாமங்களைக் கடந்து, இன்றுள்ள வடிவத்தைப் பெற்றது.சுதந்திர இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட கொடிகளில் ஒரு வடிவம் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் உதயமானது. அதை வடிவமைத்தவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார்.
லண்டனில் பிறந்து சென்னை அடையாறில் தனது இறுதி நாட்களை நிறைவு செய்தவர் அன்னி பெசன்ட் அந்நியராய் இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்களோடு சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போராளி. இதற்காகவே, 1917 ஜூன் 15-ல் கைது செய்யப்பட்ட அன்னி பெசன்ட், உதகையில் உள்ள பிர்லா ஹவுஸில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அப்போது ஊட்டியில் வீட்டுச் சிறையில் இருந்தபோதே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த அன்னி பெசன்ட் அம்மையார் பிர்லா ஹவுஸ் வளாகத்தில் துணிச்சலுடன் அந்தக் கொடியை ஏற்றினார். அன்றைக்கு அவர் கொடியேற்றிய இடத்தை இன்றைக்கும், பிர்லா ஹவுஸ் நிர்வாகத்தினர் வரலாற்று நினைவிடமாக போற்றி மதித்து பொக்கிஷமாய் பாதுகாத்து வருகின்றனர்.