• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் புனித தீர்த்த குளமானது புல்கள் முளைக்கும் இடமாக உருமாறும் அவலம்..,

ByKalamegam Viswanathan

May 17, 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் ரூ 6.50 கோடியில் புனரமைக்கப்பட்ட லெட்சுமி தீர்த்த குளமானது புல் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில்பாரா முகமாக இருப்பதை கண்டு பக்தர்கள் முகம் சுழித்துவேதனை அடைந்துள்ளனர்

தெய்வானை அம்பாளுக்காக உருவான தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில்25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமிதீர்த்த குளம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பேஇந்த தீர்த்தக்குளமானது தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழிசெய்தி கூறுகிறது. முன்னோர்காலத்தில் இந்த குளம்வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்து வந்தது. ரூ.6.50 கோடியில் புனரமைப்பு இந்த நிலையில்கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 முறைக்கு மேல்லெட்சுமி தீர்த்தகுளத்தின்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

மேலும் குளத்தில் தண்ணீர் வற்றி பாலைவனம் போல் இருந்து வந்தது இதனையொட்டி லெட்சுமி தீர்த்த குளத்தை புனரமைக்கப்பட வேண்டும். என்றுபக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் ரூ.6 கோடியே 50 லட்சத்தில்பழமை மாறாமல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரிட்டிலான சுவரும் கட்டி,புனரமைத்தது.

இதைகாணொளி மூலமாக தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புல்கள் முளைக்கும் இடமாக உருமாறிய அவலம் இந்த நிலையில் லெட்சுமி தீர்த்த குளத்தில் தண்ணீர்நிரப்பி பராமரிப்பார்கள் அல்லது மழை காலங்களில் மழை தண்ணீரை நிரப்பி மீன்குஞ்சுகள் விட்டு முறையாக பராமரிப்பார்கள் அதன் மூலம்கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தர்களும் பழங்கால நடைமுறையாக லெட்சுமி தீர்த்த குளத்திற்கு சென்று தண்ணீரை புனித தீர்த்தமாக கருதி கண்களில் ஓட்டிக் கொள்ளுவார்கள்.

மேலும் கை கால்களை அழம்பிவிட்டுகோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம்என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் பாராமுகமாக இருந்து வருகிறது. அதனால் தற்போது லெட்சுமி தீர்த்தகுளத்தின் நாலாபுறமும் புல்கள் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையாக உள்ளது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் நாளடைவில் புராணமிக்க லெட்சுமி தீர்த்த குளம் புல்கள் வளரும் இடமாக உருமாறும் புரணமைப்புக்கானரூ 6.50 கோடி வீணாகும் என்றுபக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.