• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்ட ஆட்சியரிடம் கட்டிடத் தொழிலாளர்கள் மனு..,

ByAjmalkhan saleemraja

Nov 26, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982 மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் நலவாரியங்களைப் பாதுகாக்க வேண்டும், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நலவாரியச் சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை எவ்வித காலதாமதமுமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.