• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட மின்சார வாரிய ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..,

ByP.Thangapandi

Nov 26, 2026

செக்கானூரணி அருகே சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படாததால் 3 ஏக்கர் விவசாய நிலம் தரிசாகக் கிடப்பதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள வெயிலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரம். இவருக்கு அப்பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.,

​கடந்த ஓராண்டுக்கு முன்பு வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழையால், இவரது நிலத்திலிருந்த சிதிலமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. இது குறித்து செக்கானூரணி துணை மின்நிலைய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், மாற்று மின்கம்பம் அமைத்துத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.,

​இதனிடையே, தோட்டத்திலிருந்த மின் வயர்கள் மற்றும் மின் மோட்டார் திருடு போனதால், கிணற்றுப் பாசனத்தை நம்பியிருந்த நிலம் ‘வானம் பார்த்த பூமியாக’ மாறியுள்ளது.,

​தற்போது பருவமழையை நம்பி கால்நடை தீவனத்திற்காகச் சோளம் பயிரிட்டுள்ள நிலையில், போதிய மழையின்றிப் பயிர்கள் கருகி வருவதாகவும், எஞ்சிய நிலங்கள் செடி, கொடிகள் முளைத்துத் தரிசாகக் கிடப்பதாகவும் விவசாயி வேதனை தெரிவிக்கிறார்.,

​மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணம் பெற்றுக்கொண்டு புதிய மின்கம்பத்தை மட்டும் நட்டுச் சென்ற அதிகாரிகள், முறிந்து விழுந்த பழைய மின்கம்பத்தை அகற்றாமல் நிலத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். புதிய கம்பத்திலும் இதுவரை மின் வயர்கள் இணைக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.,

​மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் வீடியோவும் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது ஏழை விவசாயி சுந்தரம், மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.,