இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து வழக்கறிஞர்கள் சட்ட விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி நீதிமன்றத்தில் துவங்கிய இந்த பேரணியை உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா துவங்கி வைத்தார்., அரசு பள்ளியில் பயிலும் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் 50 க்கும் அதிகமான வழக்கறிஞர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.,

சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திய வண்ணம் சட்டம் அனைவருக்கும் சமம் என கோசங்களை எழுப்பிய வண்ணம் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,



