அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகியுள்ளது. நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு படம் உருவாகியுள்ளது. அஜித்தின் 61ஆவது படமான இதில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜிப்ரன் இசையமைத்துள்ளார். துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. துணிவு பொங்கலுக்கு வெளியாகி வாரிசுடன் மோதுகிறது.
வாரிசு படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள சில்லா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.