• Thu. Dec 12th, 2024

நாளை கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ByA.Tamilselvan

Apr 12, 2023

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடக்க உள்ள நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறது
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. மூன்று கட்சிகளும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காததால் கர்நாடக தேர்தல் களம் இதுவரை மந்தநிலையில் உள்ளது. மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மனு தாக்கல் தொடங்கினாலும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் தான் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.