• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரியில் நீதிபதிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி ரவுண்டானா முதல் காந்தி நினைவு மண்டபம் வரை நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக.நாகர்கோவில் நீதி மன்றம் வளாகத்தில் முதல் நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்.


சமரச தீர்வு மையத்தின் செயல்பாடு மற்றும் வழக்குகளின் துரித முடிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை.குமரி மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வாக கன்னியாகுமரி காவல் நிலையத்தின் அருகாமில் உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து. நாகர்கோவில் அருகே படந்தாலுமூடு “முகில்” சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் நீதிபதிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை.மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மாய கிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் சார்பு நீதிபதி நம்பிராஜன்,சமரச மைய வழக்கறிஞர்கள் பி.ஆர். ஜெயராணி,எம்.இ.அப்பன் சரத்,பிரபா, சுபாஷ், துரைராஜ், உமாசங்கர், ஜெகன்,சுசிலா தேவி, ராமச்சந்திரன் நாயர் மற்றும் சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பங்கு பெற்றனர். தேசப்பிதா அண்ணல் காந்தியின் நினைவு மண்டபம் முன் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகள்.அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் , பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு.சமரச அமைப்பின் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நீதிபதிகள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, ஒழுங்கு படுத்திய வழக்கறிஞர்.எம்.இ.அப்பனை பாராட்டி மாவட்ட நீதிபதி அருள் முருகன் நினைவு பரிசு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *