தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தின் எல்பி நகரின் மன்சூராபாத் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி காரை ஸ்டார்ட் செய்த லக்ஷ்மன் என்பவர் காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் சாத்விக் வந்துள்ளான்.
அதை கவனிக்காத லக்ஷ்மன் காரை இயக்கியபோது சாத்விக் கார் டயரில் சிக்கினான். படுகாயமடைந்த சாத்விக் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.