• Sat. Oct 12th, 2024

பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

காரைக்குடி அருகே முறையாக நகர பேருந்து இயக்கப்படாததால் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய கொட்டகுடி ஊராட்சி,இந்த ஊராட்சி 8 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கிராமங்களில் இருந்து,பள்ளி மாணவ, மாணவிகள்,கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் பக்கத்து நகரமான காரைக்குடிக்கு சென்று வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நகரப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,அரசு பேருந்து உரிய நேரத்திற்கு வருவதில்லை என்றும்,சில நாட்களில் முழுவதுமாக இயக்கப்படாமல் இருப்பதால்,பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மற்றும் விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று தங்கள் கிராமத்திற்கு வந்த அரசு நகரப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் வந்து கிராம மக்களிடம் பேசி,உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பேருந்தை விடுவித்தனர்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *