• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை

ஸ்ரீவில்லிபுத்தூர் நிதி நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை ராஜபாளையம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் பிடிபட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு கிருஷ்ணன் கோவிலில் வசிப்பவர் காளியப்பன் வயது 26. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு புதிதாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள மோட்டர் சைக்கிளை தன் உபயோகத்திற்காக வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் காளியப்பன் அந்த மோட்டார் சைக்கிளை கடந்த 30 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த போது, அந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. இது குறித்து அவர் தந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியதாக ராஜபாளையம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சதுரகிரி மகன் அய்யனார் வயது 27 என்பவரை கைது செய்து, திருடு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிள் திருடி கைதான அய்யனார் மீது ராஜபாளையம் பகுதி காவல் நிலையங்களில் பத்திற்கும் மேற்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.