• Fri. Mar 29th, 2024

கொத்தடிமையாக்கப்பட்ட தாய்…மீட்க போராடும் மகன்…கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவல்துறை

75 வது சுதந்திர இந்தியாவில் பிச்சை எடுப்பதை எப்படி ஒழிக்க முடியவில்லையோ அதே போல கந்து வட்டி கொத்தடிமை முறைகளை ஒழிக்க முடியவில்லை.அதாவது அதனை ஒழிக்க யாரும் முன் வரவில்லை என்பது தான் உண்மை. இதெல்லாம் சாதாரணம் என்று அவரவர் நினைத்து கொள்கின்றனர். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமை போல நடத்துவது மனித தன்மையற்ற செயல் என்று தான் கூற வேண்டும்.அப்படி ஒரு சம்பவம் தான் மதுரை அருகே நடந்துள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அருகே தேவசேரி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் செல்லபாண்டி.இவரிடம் வாடிப்பட்டியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவரின் தாய் பெருமாளக்காள் தந்தை பால்பாண்டிஆகிய இருவரும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். தந்தை உடல்நலம் குன்றியதால் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் அவரது தாயார் பெருமாளக்காள் செங்கல் சூளையில் வேலைக்கு சென்றுள்ளார். அவர்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.ஆனால் அதனை வாங்க மறுத்த செல்லபாண்டி அவரது பெற்றோர்.உன்னிடம் பணத்தை நாங்க எதிர்பார்க்கவில்லை வாங்கிய கடனுக்கு வேலை பாரு என்று மிரட்டி உள்ளனர்.


ஆனால் அதனையும் மீறி பெருமாளக்காள் 50 ஆயிரம் பணத்தை தயார் செய்து செல்லபாண்டி மற்றும் அவரது பெற்றோரிடம் கட்டாயபடுத்தி கொடுத்துவிட்டார்.அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து வீட்டில் பாண்டிமுருகன் இல்லாத நேரத்தில் செல்லபாண்டியின் பெற்றோர் மேலும் 2 நபர்களுடன் வந்து பெருமாளக்காளை கடத்தி சென்று செங்கல் சூளையில் வேலை செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.அதற்கு பெருமாளக்காள் மறுக்கவே அவர்களது வீட்டில் கொண்டு சென்று அடிமை போல நடத்தி உள்ளனர்.


வீட்டிற்கு வந்த பாண்டிமுருகன் பெருமாளக்காளை காணவில்லை என்று தெரிந்த பிறகு போன் செய்து பார்க்கிறார்.அப்போது தான் நடந்த விஷயங்களை பாண்டி முருகனிடம் சொல்கிறார் பெருமாளக்காள். தான் இங்கு அடிமை போல் நடதபடுவதாகவும் மாட்டுக்கு போடும் சாப்பாட்டை ஒரு வேளை மட்டும் கொடுப்பதாகவும் சாதி ரீதியாக திட்டுவதாகவும் மாற்றுத்துணி கூட கொடுக்காமல் கேவலமாக நடத்துவதாகவும் கூறியுள்ளளார்.


இதனை அறிந்த பாண்டிமுருகன் தனது அம்மாவை பார்க்க சென்ற போது பணத்தை கொடுத்துவிட்டு உன் அம்மாவை அழைத்து செல் என செல்லபாண்டி கூறியுள்ளார். ஆறு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று காலில் விழுகாத குறையாக கேட்டுள்ளார்.அப்போதும் அவர்கள் மனமிரங்கி வரவில்லை.


இது குறித்து வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளார் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இது போன்ற புகார்கள் எப்போதும் காவல்துறைக்கு அல்வா சாப்பிடுவது போல தான், பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்களாக இருந்தால் மிரட்டுவது காசு உள்ள பக்கம் காக்கி சாய்வது ஒன்றும் புதிதல்ல. அதுபோல தான் இந்த புகாரிலும் செல்லபாண்டிக்கு ஆதரவாக தான் கட்டப்பஞ்சாயத்து நடத்த பெருமாளக்காளை அலங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு அங்கிருந்து வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.
அப்போது ரவுண்டு கட்டி பஞ்சாயத்து காவல்துறைக்கு வர அவர்கள் இதில் சில்லறை பார்ப்பதற்கு செல்லப்பாண்டிக்கு ஆதரவாக பணத்தை உடனடியாக கட்டு பணத்தை கட்டிட்டு நீ போகலாம் இல்லேன்னா இங்க தான் இருக்கணும் என காவல்துறை கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறது. இது எதுவுமே மாவட்ட எஸ்.பி க்கு தெரியாதா இல்லையென்றால் தெரியாது போல நடிக்கிறார்களா?. மீண்டும் மீண்டும் இது போன்ற நிகழ்வுகளால் காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கையாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *