திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது, சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடிய தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாள்தோறும் குறைந்த பட்சம் 50 ஆயிரம் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் தைப்பூசம் காரணமாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கையை செலுத்துவது வழக்கம். பணம், தங்க வெள்ளி நகைகள் அமெரிக்க டாலர்கள் என பல்வேறு வகையான காணிக்கைகளை பக்தர்கள் நேர்திகடனாக செலுத்துகின்றனர்.
இதற்காக கோவில் வளாகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதம் ஒருநாள் திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நடந்து வருகிறது. தற்போது கோவில் வளாகத்தில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்டியல் எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
இதையடுத்து கோயில் ஊழியர்கள் ராமகிருஷ்ணனை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது ராமகிருஷ்ணன் கோவில் உண்டியல் பணத்தில் இருந்து 93,100 ரூபாயை திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தைக் கோவில் ஊழியர்கள் பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணம் திருடி பிடிபட்ட ராமகிருஷ்ணன் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகிருஷ்ணன் இதுபோல இதற்கு முன்னரும் உண்டியல் எண்ணிக்கையில் கலந்துகொண்டு பணத்தை திருடி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]
- ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், […]