போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே போன ரயில் வியாழனன்று மேற்கே தேனி நோக்கி வருகிறது .ரயிலை வரவேற்க தேனி தயாராகி வருகிறது .
அடிமை இந்தியா ஆட்சியில் 1928 இல் மதுரை -போடி ரயில் பாதை துவக்கப்பட்டது .பய ணிகள் போக்குவரத்து ,ஏலக்காய் ,இலவம் பஞ்சு உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வட பகுதி களுக்கு கொண்டு செல்ல அவசியமாக இருந்தது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்ததை 2010 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்து, ரயில் சேவையை நிறுத்தியது .
98 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரயில் பாதையில் தண்டவாளத்தை அகற்ற பெரும் போராட்டமே தேவைப்பட்டது . இந்த வழித்தடத்தில் லாபம் இருக்காது என எண்ணிய ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்க மனம் இல்லாமல் கிடப்பில் போட்டது. போடி -மதுரை ,திண்டுக்கல் -லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் ,வணிகர்கள் என பலதரப்பு மக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகே ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தேனி வரை பணி நிறைவடைந்தது இன்று சென் னையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி யால் துவக்கி வைக்கப்படுகிறது .தொடர்ந்துநாளை முதல் ரயில் சேவை துவங்குகிறது .
பிரதமர் துவக்கி வைத்த பின் மதுரையிலிருந்து தேனி வரும் ரயிலை வரவேற்க , வணிகர்கள், பொதுமக்கள் என தயாராகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ரயிலை வரவேற்கவும் முடிவு செய்யப்பட உள்ளது.