
குமரி மாவட்டம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமும் நிறைந்த பகுதி. குமரியில் அரசின் பணிமனைகள் 13_உள்ளது. தலைநகர் நாகர்கோவில் இராணித்தோட்டம் பணி மனையில் இருந்து நகரப் பகுதியின் பெரும் பான்மை பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. இன்று (மார்ச்_09) ஞாயிறு பேருந்துகள் குறைவாக தான் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் பிரதான ஆட்சியர் அலுவலகம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒரு பேருந்தின் பின் பக்கம் கதவுகளில் ஒன்று இளகிய நிலையில் தொங்கிக் கொண்டபோதும் பேருந்து இயக்கப்பட்டது. சாலையில் சென்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு பேருந்தின் பின் பக்கத்தில் ஒற்றை கதவு ஒற்றை இணைப்பில் இருந்த போதும் இயக்கப்பட்டது தான் ஆச்சரியம்.!!
அரசு பேருந்து கதவு இளகி தொங்கும் நிலையில் இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில். போக்குவரத்து ஊழியர் வேல்முருகன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
