• Wed. Mar 26th, 2025

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொது இலவச மருத்துவ முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரத்தில் பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் வட்டார மருத்துவ ஆலோசனைக்குழு உறுப்பினர் பா.பாபு தலைமை வகித்தார். முகாமை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலர் எம்.மதியழகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி ராமராஜன், பேரூர் திமுக செயலர்கள் எஸ்.வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், பூவியூர் காமராஜ், சுதை சுந்தர், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம் ஆனந்த், பொன்முடி, இக்பால், டெல்பின், சிவசுடலைமணி மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், தாமரை பிரதாப், நிசார், ஜானி, சகாய ஆன்றனி, நாஞ்சில் மைக்கேல், மதி, விஜய கங்காதரன், ஷ்யாம், செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.