

தீபாவளித் திருநாளை புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்களை சுவைத்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசு விற்பனை உச்சநீதிமன்ற கட்டுப்பாடு காரணமாகவும் கிப்ட் பாக்ஸ் வருகை அதிகரிப்பாலும், பட்டாசுகளின் விலை ஏற்றத்தாலும் விற்பனை கடுமையாக சரிந்தது. இதனால் உள்ளூர் பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் நேற்று தீபாவளித் திருநாள் முழுவதும் அவ்வப்போது மழை பெய்ததால் இயற்கையும், வாங்கிய பட்டாசுகளை வெடிக்க இயலாமல் தடுத்தது. இயற்கை சமநிலை படுத்த முயற்சி செய்தாலும் பல பகுதிகளில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அடைந்து மக்கள் பாதிப்படைந்துள்ளனர். என்றாலும் கடந்த ஆண்டை விட பட்டாசு வெடிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும் விற்பனையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
