• Tue. Sep 10th, 2024

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மனம்திறந்த வாக்குமூலம்

இந்திநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பும் இதே போன்று இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது.

ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பல ஆடம்பர பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்ததாக அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்பு இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானபோது ஜாக்குலின் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது நடிகை ஜாக்குலின் தனது புகைப்படங்கள் மீடியாவில் வெளியாது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடும், நாட்டு மக்களும் எனக்கு அதிகப்படியான அன்பையும், மரியாதையையும் கொடுத்திருக்கின்றனர்.


நான் இப்போது கடினமான பாதையை கடந்து கொண்டிருக்கிறேன். இதை எனது நண்பர்களும், ரசிகர்களும் அறிவார்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்குறியவர்களுக்கு இதை நீங்கள் செய்ய மாட்டீர்கள். எனக்கும் இதை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நீதி வெல்லும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு கையெடுத்து கும்பிடுவது போன்ற படத்தையும் வைத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகரும் தனக்கு ஜாக்குலினுடன் நெருங்கிய நட்பு இருந்தது என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஜாக்குலினிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஜாக்குலின் தாயார் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரைக்கூட சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *