சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதியின்றி ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்ரும் தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவத் தேவைக்கு செல்வோர் ஆம்புலன்ஸிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ செல்லலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வோர் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சொந்த வாகனங்களில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி தடையை மீறி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், வெளியே வரும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் ஏற்கனவே முன்பதிவு செய்து ரயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். இவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் கிடைக்காமல் பயணிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரிக்கு வர மறுப்பதாக பயணிகள் கூறுகின்றனர். பயணச் சீட்டுகளை காண்பித்து ஆட்டோக்களை இயக்கினாலும், சவாரிகளை இறக்கி விட்டு திரும்பும் போது காவல்துறையினர் ஆவணங்கள் கேட்பதாகவும், அபராதம் விதிப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனாலேயே ஆட்டோக்களை இயக்குவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]