• Mon. Jun 5th, 2023

கல்வி விழிப்புணர்வு கலை பயணத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலங்களில் பள்ளி குழந்தைகளின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்வதற்காக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் ஐந்து குழுக்களாகப் பிரிந்து இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய விழிப்புணர்வு கலைப்பயணத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தரராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, பள்ளி தலைமையாசிரியர் செந்தூர் பாண்டியன், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டன் . கரகாட்டம் ஒயிலாட்டம் போன்ற காட்சிகளோடு இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெற்றது தென்காசி மாவட்டத்தில் 35 நாட்கள் இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெறுகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *