

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சமுக நலம் மற்றும் மகளிர் உரிமைதுறை ,குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டதின் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து பூ, சந்தனம் வைக்கப்பட்டது. அவர்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை எம்எல்ஏ மகாராஜன் வழங்கி வாழ்த்தினார்.

மேலும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, திமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கலைச்செல்வன், நாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளங்கோ, சரவணன், சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
