• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நெசவாளர் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் பாடுபடுவார் அமைச்சர் உறுதி..,

ByS.Ariyanayagam

Apr 15, 2026

நெசவாளர் பிரச்சனைகளை நிச்சயமாக முதல்வர் தீர்த்து வைப்பார் என அமைச்சர் சக்கரபாணியும், திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில் குமாரும் தெரிவித்தனர்.
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ .பி. செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சக்கரபாணி நெசவாளர் வசிக்கும் பாரதிபுரம் ,பொன் சீனிவாசன் நகர் உட்பட பல இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு நெசவாளர் வீட்டுக்கு சென்று இருவரும் நெசவு நெய்தனர். அப்போது நெசவாளர்களிடம் குறைகளைக் கேட்டனர். நூல் விலை உயர்வால் துணி நெய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு தகுந்த கூலி கிடைக்கவில்லை. நெய்யும் துணிக்கும் விலை கிடைக்கவில்லை.

நெசவாளர்கள் பலருக்கு வீடு இல்லாமல் உள்ளனர் என்பது உட்பட பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். இதற்கு அமைச்சர் சக்கரபாணியும், திமுக வேட்பாளர் ஐ .பி .செந்தில்குமார் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக நிறைவேற்றுவார். அவரும் நெசவாளர்களோடு நெசவாளராக நெசவு நெய்து உங்கள் பிரச்சனைகளை தெரிந்து வைத்திருக்கிறார். மீண்டும் 2.0 திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டவுடன் நெசவாள்கள் பிரச்சனை அணைத்தும் தீர்வு காணப்படும் என இருவரும் உறுதி அளித்தனர்.