• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு..,

BySeenu

Apr 15, 2026

கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர் கூறியதாவது.

‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம்.

நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான செய்தி எல்லா பத்திரிகையிலும் ஒரே மாதிரி வந்திருக்கின்றது.

மக்களவை எண்ணிக்கையை அதிகரித்து பின் மறு சீரமைப்பு என சொல்வது மாயை.

Delimitation என்றால் உடனடியாக தெரிந்து விடும். 39 தொகுதி என்பது 32 ஆக குறையும். ஆனால் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்தி, பின்னர் 58 தொகுதி 46 ஆக குறையும்.

உத்திரபிரதேசத்தில் 80 மக்களைவை தொகுதி 120 தொகுதியாக உயரும். டிலீமிட்டேசனுக்கு பின்பு 140 ஆக அங்கு உயரும்.

இது தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும்.

24.3 சதவீதம் உறுப்பினர்கள் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இது 20.7 சதவீதமாக நாடாளுமன்ற வாக்கு சதவீதம் குறையும். தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும்.

பெண்கள் ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கிறோம். இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். 543 ல் உடனடயாக 3 ல் ஒரு பங்கு உயர்த்த வேண்டும் என 2024 நாடாளுமன்ற தேர்தலில் வலியுறுத்தினோம்.

2029 தேர்தலில் நறைவேற்றுவோம் என சொல்கின்றனர். ஏப்ரல் 29 ம் தேதி இந்த கூட்டத்தை கூட்டலாமே.. நாடாளுமன்ற கூட்டத்தை 13 நாட்கள் பின்னர் கூட்டப்போடுவதால் என்ன பிரச்சினை. மேற்குவங்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்த 67 எம். பி கள் இதில் கலந்து கொள்ள கூடாது என நினைக்கின்றனர்.

காங், திமுக,தோழமை கட்சிகளை சேர்ந்த 39 பேரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். கடைசி 5 நாட்கள் தேர்தல் விலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்க நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி.

67 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நாடாளுமன்றத்தை கூட்டுவதன் அவசியம் என்ன?

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பாதகம் ஏற்படும், பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும் . எடப்பாடி பழனிச்சாமி பதில் எனக்கு அதிர்ச்சியை தருகின்றது.

அமித்ஷாவை கேட்டேன். அவர் பாதகம் வராது என்று சொன்னார். அதனால் பாதகம் வராது என்கின்றார். அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இவர் ஒலிபெருக்கியா? அமித்ஷாவின் பதிலை சொல்கின்றார். இது ஒரு கட்சி தலைவருக்கு அழகா? இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள்.

பீகாரில் நிதிஷ் குமார் எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என ஆரம்பத்தில் கேட்டேன். நேற்று பா.ஜ.க முதல்வர் பொறுப்பு ஏற்று விட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆசை நிராசை ஆகப்போகின்றது. அவர் முதல்வராக முடியாது. விபத்தில் அவர் முதல்வராக வந்தாலும், பிற மாநிலங்களை போல இங்கும் நடக்கும்.

39 மக்களவை தொகுதியினை 58 ஆக மாற்றி பின்னர் டிலிமிட்டேசனில் 46ஆக குறைப்பார்கள். அவ்வளவு ஏமாளிகளா தமிழக மக்கள் ?

பா.ஜ.க நேரடியாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றது. மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. பேசாத பார்லிமென்ட் என்ன பார்லிமென்ட். நாள் தோறும் ஒத்தி வைப்பு தீர்மானம். போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை.

இந்தியாவின் முன்னாள் தூதர்கள் சாய்சரண், சிவ சங்கர் மேனன் போன்றவர்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரிந்து விட்டது என கட்டுரைகள் எழுதி இருக்கின்றனர்.

ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாக தகவல்கள் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் முழு பலம் இருந்தால் இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கபடும். அரசியல் விபத்து நடந்து எடப்பாடி முதல்வரானால் பீகாரை போல் நடக்கும்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லையே என்ற கேள்விக்கு,
திமுக தேர்தல் பரப்புரை செய்ய என்னை கேட்டார்கள். அதனால் அவர்களது தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றேன் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.