• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

Byமதி

Sep 28, 2021

சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதாவது, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக்கோருவது பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும், அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாலும் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.