75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அரசு பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.இன்று காலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவில் காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தலைசார் தமிழர் ,அப்துல்கலாம் விருது,கல்பனாசாவ்லா விருது,முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகளையும் சிறந்த மாநகராட்சி ,நகராட்சி போரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்குகிறார்.
கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர்
