75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய,மாநில அரசுகள் பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றி வைத்தார். முன்னதாக செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படை தளபதிகள் வரவேற்றனர்.