நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு செங்கோட்டையில் பிரதமர் மோடி 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் மிகவும் வித்தியாசமான தலைப்பாகையை அணிந்திருந்தது அனைவரது பார்வையையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த தலைப்பாகையில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் தேசியக்கொடியை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இது பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அமைந்துள்ளது வியக்கத்தக்கது.