சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அளித்துளள் பேட்டியில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போல்,தற்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு காரணம் முதலமைச்சரின் துரித நடவடிக்கையும், நிர்வாகத்திறமையும் தான் என்று கூறினார்.
மேலும், கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு ஒரு கூடுதல் சுமையாகவே உள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிச்சயமாக அதனை தமிழக முதலமைச்சர் அதனையும் விரைவில் சீரமைப்பார் என்றும் தெரிவித்தார்.வெள்ள சேதங்களை சீர் செய்யும் பணியால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போகுமா என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெள்ள சேதங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் ,
நீதிமன்ற உத்தரவுபடி குறிப்பிட்ட கால அவகாசத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். தென் தமிழகத்தில் தேவையான அளவுதான் மழை பெய்துள்ளது என்றும், அதனால் சேதங்கள் அதிகம் இல்லை என்ற அமைச்சர், மழை பெய்து சேதம் ஏற்பட்டால்,உள்ளூர் அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம் அது சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்