• Wed. Apr 24th, 2024

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை

Byகாயத்ரி

Nov 11, 2021

கடந்த வாரம் இதே நாளில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 35,576 ஆக இருந்த நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,960-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து, ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை 1,384 ரூபாய் உயர்ந்துள்ளது .


அதே போல் வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் உயர்ந்து ரூ.70,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த வாரம் இதே நாளில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,700 ஆக இருந்த நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன..ஒரே வாரத்தில் வெள்ளியின் விலை 2,900 ரூபாய் உயர்ந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *