• Sat. Apr 20th, 2024

வாயில்லா ஜீவனை துன்புறுத்தும் கொடூர அரக்கன்..! ஜல்லிக்கட்டில் சலசலப்பு

Byகாயத்ரி

Jan 17, 2022

பொங்கல் என்றால் நம் நினைவில் முதலில் வருவது நம் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தான். தன் மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு விவசாயியும் இந்த ஜல்லிக்கட்டில், தான் பெற்ற பிள்ளைப்போல் வளர்க்கும் காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட்டு அதன் வீரத்தை கண்களால் மெச்சுவான்.

அதேபோல் இந்த வருடம் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலிருந்து மாடு விடும் போட்டியில் மாட்டையும் மனிதர்களையும் பெரிய தடிகொண்டு ஒருவன் காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காட்சி மனதை கனக்க செய்தது.இது எந்த வகையில் நியாயமானது… அவனைப் போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகும்.தூக்கமின்றி பசியின்றி இரவென்றும் பகலென்றும் பாராமல் மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை சரி செய்து போட்டியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்து அங்கே அடி வாங்குவதும், மனிதன் அடிவாங்குவது ஒரு புறமிருந்தாலும் வாயில்லா ஜீவன் மாட்டை அடித்து துன்புறுத்துவது எப்பேர்ப்பட்ட கொடுமையான காரியம் என்பதை இந்த வீடியோ மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய இழி செயலில் ஈடுபட்டவரின் மீது காவல்துறை நடவடிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களுடைய கேள்வியாக இங்கேயே வைக்கப்படுகிறது.

ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் மாடு விடும் போட்டியில் எல்லோருக்கும் சொந்தம் எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் மாடுகளை விடுவதற்கு அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு வருகின்ற மாடுகளையும் மாட்டின் உரிமையாளர்களையும் கையில் ஏந்திய பெரிய தடி கொண்டு அடிப்பதை பார்த்தாள் அங்கமே பதறுகிறது, உள்ளமே ஓடி ஒளிகிறது, உடம்பு முழுவதும் தவி தவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தயவு செய்து இது போன்ற அரக்கர்களை மாடு விடும் போட்டியலே உள்ளே இறங்க விடாமல் சம்பந்தப்பட்ட காவல் துறையையும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும் இறங்கி இதை சீர்செய்து ஒழுக்கமான முறையிலேயே அந்த விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது. வாயில்லா ஜீவனை கொடுமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இதற்கு தமிழக அரசும், மாவட்ட ஆட்சியாளரும் அது சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் முயற்சி எடுத்து இதுபோன்ற கொடிய அரக்கர்களை களை எடுக்குமா ஆனால், மாட்டின் உரிமையாளர்களும், விவசாயிகளும் அச்சம் பயம் நீங்கி சுதந்திரமாக மாடு விடும் போட்டியில் கலந்து கொண்டு தன் மாட்டின் உத்வேகத்தை கண்டு களிக்கும் பொருட்டு அவர்களுக்கு கிடைக்கும்.

இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு நேரும் துன்பங்களுக்கு மக்கள் தயங்கமால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் வகையில் கையாளுதல் நன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *