• Mon. Apr 21st, 2025

திமுக குடும்ப அரசு வீட்டுக்கு அனுப்புகிற பிரம்மாஸ்திரம் தான் துண்டு பிரச்சுரம் ஆர்பி உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Apr 1, 2025

ஸ்டாலின் மாடல் அரசின் வெற்றி விளம்பரம் பட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை காட்டில் பறக்க விட்டு பச்சிட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின் மாடல் அரசு.

திட்டம் என்று சொன்னால் அடுத்த தேர்தலை மையமாக வைத்து திட்டங்கள் கொடுப்பவர் அரசியல்வாதி அடுத்த தலைமுறை வாழ்வளிப்பதற்காக திட்டங்கள் கொடுப்பது அதிமுக.

100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வருகிற வரை முதலமைச்சர் சம்பளத்தை பெற மாட்டேன் என்று பிரகடத்தை செய்வதற்கு மு க ஸ்டாலின் தயாரா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி,

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விடத்தகுளம் கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று அம்மா அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடம் நேரில் வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதி விடத்தகுளம் கிராமத்தில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார். திண்ணை பிரச்சாரத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் விடத்தகுளம் பகுதியில் வீதி,வீதியாகச் சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திடும் வகையில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்
முன்னதாக திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசைவ அன்னதானத்தை தொடங்கி வைத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்ட பொருளாளர் திருப்பதி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன் ராமசாமி கண்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் லதா ஜெகன் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிங்கராஜ் பாண்டியன் நிர்வாகிகள் பால்பாண்டி கண்ணபிரான் செல்வம் பாலசுப்பிரமணியன் விஜி உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது,

உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது துண்டு பிரசுரம் காகிதத்தில் அச்சடித்துள்ள விஷயம் மட்டும் அல்ல நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் விரோத அரசு சர்வதிகார அரசு ஸ்டாலின் திமுக குடும்ப அரசு வீட்டுக்கு அனுப்புகின்ற பிரமாஸ்திரம் தான் துண்டு பிரசுரம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொடுத்து வருகிறார்கள்.

ஸ்டாலின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு பட்ஜெட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்திருக்கிற ஸ்டாலின் மாடல் அரசு காகித பூ என்னவென்றால் மல்லிகைப்பூ நம் பக்கத்தில் தான் விளைகிறது பூமியில் விளைகிற மல்லிகைப்பூ மனம் பரப்புவதற்கு பல்வேறு சவால்கள் இருக்கிற நேரத்தில் காகித பூ எப்படி மணக்கும் பட்ஜெட்டை ஒளிபரப்பு செய்தார்கள் திடீரென ஒளிபரப்பு செய்தார்கள் புதிய திட்டம் வரப்போகுதா என்று பார்த்தால் எந்த திட்டமும் இல்லை பட்ஜெட்டில் எதுவுமில்லை பார்ப்பதற்கு யாரும் இல்லை நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

திட்டம் என்று சொன்னால் அடுத்த தேர்தலை மையமாக வைத்து செய்யக்கூடாது அடுத்த தேர்தலை மையமாக வைத்து திட்டங்கள் கொடுப்பவர் அரசியல்வாதி அடுத்த தலைமுறையை வாழ்வளிப்பதற்காக திட்டங்கள் கொடுப்பது அதிமுக
மடிக்கணினி கல்லூரியில் படிப்பவர்களுக்கு கொடுக்கப் போவதாக கூறுகிறார்கள் ஏனென்றால் நாளை தேர்தல் வரப்போகிறது நான் கரை ஆண்டுகள் கொடுக்க வேண்டியது தானே கறவை ஆடு மாடுகள் தாலிக்கு தங்கம் இருசக்கர வாகனம் அம்மா பரிசு பெட்டகம் அம்மா சிமெண்ட் அம்மா குடிநீர் மகப்பேறு உதவித்தொகை 18,000 ரூபாய் கொடுத்தோம் நிறுத்தி விட்டார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வரவில்லை சம்பளம் வருகிற வரை முதலமைச்சர் சம்பளத்தை பெறமாட்டேன் என்று பிரகடத்தை செய்வதற்கு மு க ஸ்டாலின் தயாரா என்பதை கேட்க விரும்புகிறேன் என சிறப்பு உரையாற்றினார்.