காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த காதலனை கட்டிய லுங்கியுடன் பிடித்து வந்து தன் கழுத்தில் தாலிகட்ட வைத்திருக்கிறார் விருதாசலத்தை சேர்ந்த இளம்பெண்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த சின்னாத்து குறிச்சியைச் சேர்ந்தவர் சுகுணா, இவருக்கும் அரியலூர் மாவட்டம் பெரியாத்து குறிச்சி மணிவேல் என்பவருக்கும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக இடத் பணிபுரியும் போது காதல் மலர்ந்தது.

கொரானா காலகட்டத்தில் இருவரும் வேலை இழந்து கிராமத்தில் வசித்து வந்தனர். அதற்கு முன்னதாக சென்னையில் இருவரும் தனிமையில் சந்தித்து காதல் வளர்த்ததால் சுகுணா கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிவேலை வற்புறுத்திள்ளார். ஆனால் மணிவேல் சொத்துகாக தனது உறவுக்கார பெண்னை திருமணம் செய்ய தயாராக இருந்துள்ளார்.