• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி பலியான விசிகவினர் குடும்பத்திற்கு திருமா நிதியுதவி!…

By

Aug 19, 2021

கொடிக்கம்பம் நட முயற்சித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திருமாவளவன் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாயூர் கிராமத்தில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொடிக்கம்பம் நட முயன்றனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரபு மற்றும் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் திருமாவளவன் இருவரது குடும்பத்துக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இறந்த தொண்டர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். இந்நிழ்வில் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விசிக பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.