• Mon. Apr 21st, 2025

ஆதரவற்ற முதியவரின் சடலம்.., நல்லடக்கம் செய்த சிவமடத்தினர்…

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆதரவற்ற மனநலம் குன்றிய முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களிடம் யாசகம் பெற்று உணவு உண்டு சாலை ஓரங்களில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே மயங்கி கிடந்த இவரை அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. இதை அடுத்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது உடலை அடக்கம் செய்ய கம்பம் சிவனடியார் மடத்தை கேட்டுக்கொண்டனர்.

இதை அடுத்து இறந்த ஆதரவற்ற முதியவரின் உடலை கம்பம் சிவமட நிர்வாகி எ.ராமகிருஷ்ணன் குடும்பத்தார் பெற்று, தொழிலதிபர் எம்.கே சேகர், காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் ஆகம முறைப்படி இறுதிச் சடங்கு செய்து கம்பம் – ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.