• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. வேட்பாளர் எஸ். நாகஜோதி ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..,

ByPuthar Pandian P

Apr 17, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி ஆதரித்து துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அம்மையநாயக்கனூரில் தேர்தல் பிரச்சாரம் வேனில் நின்று உதய சூரியனுக்கு ஓட்டு கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது தி.மு.க. ஆட்சியில் மகளீர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு வழங்கி உள்ளது. பெண்களுக்கு தேவையான திட்டங்களை தி.மு.க வேட்பாளர் நாகஜோதி தேடி தேடி வந்து நிறைவேற்றுவார். நிலக்கோட்டை தி.மு.க. சோட்டையாக மாற்றி காட்ட வேண்டும் உதய சூரியன் சின்னத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் மீண்டும் தற்போது தி.மு.க. வேட்பாளர் நாகஜோதி வெற்றி பெற செய்ய வேண்டும் , நிலக்கோட்டை தொகுதியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இல்லாத நிலையிலும் இந்த தொகுதியில் தி.மு.க. அரசு வத்தலக்குண்டு பேரூராட்சியில் ரூ 50 கோடி செலவில் குடிநீர் திட்டம் செய்யப்பட்டுள்ளது.

நிலக்கோட்டையில் கிராம புறங்களில் 15 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தி உள்ளோம். நிலக்கோட்டை மகளீர் கலைக்கல்லூரியில் 1 கோடி மதிப்பீட்டில் வகுப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. விளம் பட்டி, மட்டப்பாறை ஆகிய ஊர்களில் நெல் கொள்முதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தொகுதியில் பல்வேறு ஊர்களில் சாலை வசதிகள் ரேசன் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளது தேர்தல் வாக்குறுதிகள் 8 ஆயிரம் கூப்பன் , மகளீர் உரிமை தொகை ரூ 2 ஆயிரம் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பற்றி பேசினார். நிலக்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் ( தெற்கு), சவுந்திர பாண்டியன் (வடக்கு)கரிகால பாண்டியன் (மேற்கு) வத்தலக் குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகன், கனிக்குமார், கனகதுரை அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி. செல்வராஜ், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.