• Sun. Sep 8th, 2024

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது – எச் ராஜா…

அதிமுக எங்களுடைய மதிப்பிற்குரிய கூட்டணி கட்சி. அதன் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. காளையார்கோவிலில் எச் ராஜா பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா இவ்வாறு கூறினார். மேலும், வரும் நகர்ப்புற தேர்தலில் எங்களது அதிமுக, பாஜக கூட்டணிதான் உறுதியாக வெற்றி பெறும் என்று கூறியவர், தமிழக கவர்னர் அரசின் செயல் திட்டங்களில் தலையிடுவது குறித்த கேள்விக்கு, தமிழக கவர்னர் தமிழக அரசின் செயல் திட்டங்களில் தலையிடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும், தமிழக செயல்திட்டங்களில் கவர்னர் தலையிடக்கூடாது என கூறிவதற்கு கே.எஸ் அழகிரி ஒன்றும் கவர்னருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு பெரியவர் அல்ல என்றும் கிண்டலடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *