• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத்தேவரின் 59வது குருபூஜை விழா, 114 வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

இந்த நாளை ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குரு பூஜை விழா நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள குருபூஜையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத், மாவட்ட எஸ்பி கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.