• Thu. Mar 28th, 2024

தமிழக மீன்பிடி விசைப் படகுகள் ஏலம் திட்டமிட்டபடி தொடங்கியது

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கைதாகும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை தமிழக மீனவர்களுக்கு திருப்பித் தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, அந்த படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவித்தது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காரைநகரில் 65 படகுகள், காங்கேசன்துறையில் 5 படகுகளில், கிராஞ்சியில் 24 படகுகள், மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னாரில் 9 படகுகள் , கல்பிட்டியில் 2 படகுகள் என மொத்தம் 105 படகுகள் ஏலம் விட ப்போவதாக அறிவித்தது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு மீன

வ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. இதனால் இலங்கை அரசின் இந்த ஏலம் அறிவிப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றுபல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம் விடப்பட்டு வருகிறது . தமிழக மீன்வர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், திட்டமிட்டபடி இன்று காலை 9 மணி முதல் ஏலம் விடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *