• Sat. Oct 12th, 2024

பெண்களுக்கான திருமண வயது இனி 18 கிடையாது… 21 தான்..

Byமதி

Dec 16, 2021

பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க ஜெயா ஜேட்லி தலைமையிலான நிதி ஆயோக் சிறப்புக் குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைபடி, 21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு சட்டமாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *