• Fri. Apr 19th, 2024

முதல் படத்திலேயே காணாமல் போன நடிகைகள்

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கண்ட நடிகைகள் அடுத்த படத்திலேயே காணாமல் போகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில படத்திலேயே காணாமல் போன நடிகைகளை பார்க்கலாம்.

அபிதா: தமிழ் சினிமாவில் சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அபித குஜலாம்பாள் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்பு பட வாய்ப்பு கிடைக்காததால் குங்குமம், ராஜராஜேஸ்வரி, திருமதி செல்வம், தங்கமான புருஷன் ஆகிய சின்னத்திரை சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரிச்சா கங்கோபாத்யாய்: 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் ரிச்சா நடித்திருந்தார். இப்படத்தில் யாமினி கதாபாத்திரத்தில் திமிரான காதலியாகவும், பொறுப்பான மனைவியாகவும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு, ரிச்சா சிம்புக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். தமிழில் அதன்பிறகு பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. ரிச்சா, ஜோ லாங்கெல்லாவை 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


ஜெயா சீல்: எழில் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பெண்ணின் மனதை தொட்டு. இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயா சீல். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் கலகலப்பு, சாமுராய் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

மானு: காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் மானு. இந்த படத்தில் இவர் நடித்த திலோத்தம்மா கேரக்டர் இன்று வரை பேசப்படுகிறது. இவர் கதக், பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகிய நடன கலைகளில் மிகத் திறமை வாய்ந்தவர். காதல் மன்னன் திரைப்படத்திற்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து மோகன்ராஜா நடிப்பில் வெளியான என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்திருந்தார்.

பிரியா கில்: மாடல் அழகியான பிரியா கில் ரெட் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் ஒரே ஒரு படத்தில் அதுவும் அஜித்துடன் நடித்த பெருமையுடன் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் பிரியா கில். அதன்பிறகு ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விட்டார்.

வசுந்தரா தாஸ்: கடந்த 2000 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். அதன் பிறகு இவர் அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர நினைத்த வசுந்திரா தாஸ் தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தார்.

மோனிகா காஸ்டெலினோ: கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படம் மூலம் அறிமுகமானவர் மோனிகா. இதன் பிறகு இவர் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வராமல் போக ஹிந்தி தொடர்களில் நடித்து வருகிறார்.

ஷஹீன் கான்: கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யூத். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷஹீன் கான்.இந்த ஒரு படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதற்கு பிறகு அவர் தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் ஷஹீன் கான் நல்ல கதாபாத்திரம் வேண்டும் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு இவர் தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

பிரீத்தி ஜஹாங்கினி: தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஹலோ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்தி ஜஹாங்கினி. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படத்திலும் பிரீத்தி நடிக்கவில்லை. பெங்காலி, உருது, கன்னடம், ராஜஸ்தானி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *