தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். அதேபோல் புதுமண தம்பதிகளும் திருமணத்தன்று அணிந்த மாலைகளை நீர் நிலைகளில் விட்டு தாலி பிரித்து கட்டி வணங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழராஜ வீதி அருகே உள்ள சாந்தராமன் கோயில் பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட காலை முதல் ஏராளமான பெண்கள் குவிந்து அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி இந்த விழாவை கொண்டாடினர்.

அதேபோல் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து கட்டிக்கொண்டு ஆடி பதினெட்டை கொண்டாடி வரக்கூடிய நிலையில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் எப்படி செழிக்கிறதோ அதேபோல் குடும்பம் தழைக்க அனைவரும் நீடூடி வாழ ஆடி 18 கொண்டாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.




